ஆண்டிபட்டி அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா..பிளாஸ்டிக் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழாவில் BEAT PLASTC POLLTION என்ற எழுத்துரு வடிவில் மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  .

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா வழிகாட்டுதலின்படி ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பள்ளியில் பயிலும் 6 முதல் +2 வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மாசை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற தலைப்பில் கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து நேற்று வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வனச்சரகர் அருள்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுமத்திரா தேவி தொகுத்து வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் தனவேல் ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தார். 

சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத வங்கி கிளை மேலாளர் லோகேஷ் குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.அதற்கு பின்னர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் BEAT PLASTC POLLTION என்ற எழுத்துரு வடிவில் மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் வனபணியளர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Environment Day celebration at Andipatti Government School Students raised awareness about plastic


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->