மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை கொளத்தூரில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தெற்கு மாட வீதி சேர்ந்தவர் இளையராஜா (வயது45). இவர் அப்பகுதியில் யுனை டெட் காலனியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இளையராஜா, வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொளத்தூர் போலீசார், உயிரிழந்த இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார், வெல்டிங் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker killed electrocuted in Chennai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->