ரூ. 28 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!
Work to construct a cement road valued at Rs. 2.8 million has been inaugurated by opposition leader Shiva
வில்லியனூர் ஒதியம்பட்டுபேட்டில் ரூ. 28 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டுபேட் பகுதியில் உள்ள 8 குறுக்குத் தெருக்களுக்கு புதுச்சேரி அரசின் ஆதிதிராவிட நலத்துறை மூலம் ரூ. 27 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பக்க வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், ஊர் முக்கியஸ்தர்கள் செல்வநாயகம், கதிரவன், அருள்மணி, கிருஷ்ணராஜ் டாக்டர் அமலோர், சேகர், சராச்சந்திரன், சரவணன், குமரகுரு, அலேக்சான்டர், சைமண், எலியாஸ், கமல் காந்தன், ஞானராஜ், கிஷோர், எட்மன்டன், மதன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, செல்வநாதன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளைக் கழக நிர்வாகிகள் ஜனா, வெங்கடேசன், மிலிட்டரி முருகன், கார்த்திகேயன், மனோகர் ,முருகேசன், வீரக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Work to construct a cement road valued at Rs. 2.8 million has been inaugurated by opposition leader Shiva