மகன் இறந்ததும், தம்பியுடன் சேர்ந்து மாமியார் செய்த வேலை.! உயிருக்கு போராடும் குழந்தைகள்.!  - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை திரும்ப செலுத்த கூறி தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மனைவி குழந்தைகள் உடன் தற்கொலை செய்துள்ளார். 

தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாத புரத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் தனது வளர்ப்புத் தாய் வசந்தா வீட்டில் மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு மகள் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ராமதாஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். ராமதாஸ் வாங்கிய கடனை கொடுக்கும்படி பிரியதர்ஷினிக்கு ராமதாஸிடம் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வருவதை பிரியதர்ஷினி மாமியார் வசந்தா விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டை காலி செய்யுமாறு பிரியதர்ஷினிகக்கு மாமியார் வசந்தா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் வீட்டை விட்டுப் போக பிரியதர்ஷினி மறுத்து வந்து உள்ளார்.

இதனால் வசந்தாவும் அவரது தம்பி ராஜேந்திரனும் சேர்ந்து பிரியதர்ஷினி யையும் அவரது மகள் பர்வதவர்தினியையும் கடுமையாக அடித்து உள்ளனர். இப்பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியதர்ஷினி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women suicide in sivagangai 


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal