காவலர்கள்...காதல்... கர்ப்பம்.. கடைசியில் அரங்கேறிய காரியம்..!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் அஞ்செட்டி அருகே பாணுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த நதியா என்பவர் திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகின்றார். அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், நதியாவிற்கும் காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் நெருங்கி பழகியதன் விளைவாக நதியா கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்புகள் எதுவும் இல்லை என்று தெரிகிறது. எனவே திருமணம் செய்து கொள்ளலாம் என நதியா தெரிவித்துள்ளார்.

suicide, seithipunal

ஆனால், கண்ணன் இதற்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக மனமுடைந்த நதியா நேற்று எறும்பு சாக்பீஸ் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து பின்னர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியதன் காரணமாக கண்ணனிடம் விசாரணை நடத்த காவல் அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women police suicide attempt


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal