தருமபுரி || விபத்தில் உயிரிழந்த காதலன் - மன உளைச்சலில் காதலி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்த அகில் பிரியா என்பவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அவரது உறவினரான கட்டரசம்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அகில் பிரியா தீபாவளிக்கு தனது சொந்த ஊருக்கு வந்து விட்டு கோயம்புத்தூர் செல்வதற்காக கடந்த 14-ம் தேதி சென்றுள்ளார். அப்போது தன் காதலனைச் சந்திப்பதற்காக போன் செய்து சேலம் வருமாறுக் கூறியுள்ளார். 

அதன் படி ஸ்டாலின் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு வந்த போது அயோத்தியபட்டினம் ராமர் கோயில் அருகே விபத்தில் சிக்கி ஸ்டாலின், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதையறிந்த, அகில்பிரியா மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று  விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide in dharmapuri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->