பண்ருட்டி || காதலை கைவிட்ட காதலன் - போராடி கரம் பிடித்த காதலி.! - Seithipunal
Seithipunal


பண்ருட்டி || காதலை கைவிட்ட காதலன் - போராடி கரம் பிடித்த காதலி.!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் புதுநகரைச் சேர்ந்தவர் அசீனா. பெற்றோர் இல்லாததால் அசீனா அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

அப்போது, அசீனாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் தென்னரசு என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அசீனா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தென்னரசுவை கேட்டுள்ளார். 

அதற்கு, தென்னரசு மறுப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அசீனா விடாமல் வற்புறுத்தி வந்துள்ளார். இதனை தென்னரசு கண்டுகொள்ளாமல் இருந்ததால், அசீனா பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் படி, போலீஸார் தென்னரசு மற்றும் அவரது பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதன் பிறகு தென்னரசு, திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்ததையடுத்து போலீசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தென்னரசு, அசீனாவின் கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இரு தரப்பு உறவினர்களும் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman married boy friend in panruti police station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->