பெண்ணை கொன்று குப்பை லாரியில்  வீசிய சம்பவம்..கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


பெங்களூரு அருகே பெண்ணை கொன்று குப்பை லாரியில் உடலை வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு பகுதியில்  மாநகராட்சியின் குப்பை லாரியில் ஒரு பெண்ணின் உடல் சாக்கு மூட்டையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் உளிமாவு பகுதியைச் சேர்ந்த ஆஷா என்ற புஷ்பா என்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் அடங்கிய சாக்கு மூட்டையை ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் தூக்கி வந்து குப்பை லாரியில் வீசி சென்றது தெரியவந்தது.

அதையடுத்து சி.கே. அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்தநிலையில்  அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைதான நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சுதீன்,கடந்த  2 ஆண்டுக்கு முன்பு அசாமில் இருந்து பெங்களூருவுக்கு வந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்த போது அதே நிறுவனத்தில்  வேலை செய்த அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.  கடந்த 1½ ஆண்டாக சம்சுதீன் மற்றும் ஆசா ஒரே வீட்டில் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார்.

மேலும் சில வாலிபர்களுடன் ஆஷா அடிக்கடி செல்போனில் பேசியபடி வந்துள்ளார். இதுபற்றி சம்சுதீனுக்கு தெரியவந்ததும் ஆசாவை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 28-ந் தேதி இரவும் ஆஷா வீட்டிற்கு தாமதமாக வந்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சம்சுதீன் ஆஷாவை அடித்து தாக்கியுள்ளார்.

மேலும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்கு பைக்குள் திணித்து, மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று குப்பை லாரியில் சம்சுதீன் வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman killed and thrown into garbage truck Confession of the arrested lover


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->