எனக்கே தெரியல.. விராட் கோலி தான் எனக்கு லாலா புனைப்பெயரை கொடுத்துருப்பாரு! ஷமி பேட்டி
Virat Kohli probably gave me the nickname Lala Shami interview
கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு, அவர்கள் காட்டும் விளையாட்டு திறமை அல்லது சிறப்பான குணாதிசயம் அடிப்படையில் புனைப்பெயர்கள் வழங்கப்படுவது ஒரு வழக்கம். எடுத்துக்காட்டாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி உட்பட பலரும் விராட் கோலியை “சீக்கு” என்று அழைப்பார்கள். அதேபோல், இந்தியாவின் புகழ்பெற்ற லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே “ஜம்போ” என்ற புனைப்பெயருடன் உலகம் முழுவதும் அறியப்பட்டார்.
அந்த வரிசையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி “லாலா” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறார். இந்த பெயர் எப்படி வந்தது என்பது ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு கேள்வியாகவே இருந்து வந்தது.
பாகிஸ்தானில் இருந்து வந்த “லாலா”
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடிக்கு அந்நாட்டு ரசிகர்கள் அன்புடன் “லாலா” என்று அழைப்பது வழக்கம். அதே பெயரை இந்திய அணியின் உள்ளக வட்டாரத்திலும் ஷமிக்குப் பயன்படுத்துவது பலருக்கும் சுவாரஸ்யமாக இருந்தது.
சமீபத்தில், ஒரு பேட்டியில் ஷமியிடம் “லாலா என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள்?” என்று செய்தியாளர் நேரடியாகக் கேட்டார். அதற்கு அவர் மிகத் தெளிவாகச் சொன்ன பதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
“எனக்கும் காரணம் தெரியாது” – ஷமி
ஷமி கூறியதாவது:“லாலா என்ற பெயரை எனக்கு ஏன் வைத்தார்கள் என்று எனக்கே தெரியவில்லை. அது விராட் கோலி செய்த வேலை இருக்கலாம். அவருக்கு அப்படிப்பட்ட புது பெயர்களை வைப்பது வழக்கமாகத்தான் இருக்கும். ஒரு நாள் நானே சிந்தித்துப் பார்த்தேன் – சாகித் அஃப்ரிடிக்கும் அதே பெயர்தானே இருக்கிறது? ஆனால் அதனுடைய அர்த்தம் எனக்குத் தெரியவில்லை.”
மேலும் அவர் சிரித்துக்கொண்டே கூறினார்:“நான் உடல் பருமனாக இல்லை. தங்க நகை வேலை செய்வோர்களுக்கு லாலா என்று சொல்லுவார்கள். ஆனால் நான் அந்த வேலையும் செய்யவில்லை. அப்படியிருக்க, ஏன் அந்தப் பெயர் எனக்குக் கிடைத்தது எனத் தெரியவில்லை. ஆனால் அணிக்குள் நுழைந்தவுடன் யாருக்காவது ஒரு புனைப்பெயர் வந்து விடும். அதை பற்றி அதிகமாகக் கேள்வி கேட்டால், கிண்டல் செய்வார்கள். எனவே, அதை அப்படியே விடுகிறேன்.”
உலகக்கோப்பை வீரர் – மீண்டும் வரத் தயாராகும் ஷமி
2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை எடுத்தவர் ஷமிதான். அதன் பின்னர் காயம் காரணமாக ஓய்வெடுத்த அவர், குணமடைந்தபின் 2025 சாம்பியன்ஸ் டிரோபி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆனால் அதன் பின் அணியில் இடம் கிடைக்காமல் போனதால், தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க அவர் கடுமையாகப் போராடி வருகிறார்.
English Summary
Virat Kohli probably gave me the nickname Lala Shami interview