சண்டை இருக்கு ஆனா இல்லை..பாஜக அரசுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் சண்டையா? மோகன் பகவத் சொன்ன விளக்கம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே பல மாதங்களாகவே முரண்பாடுகள் நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவின. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வந்ததாக வதந்திகள் கிளம்பின. இதனால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறவைச் சுற்றி பரபரப்பு நிலவியது.ஆனால், இத்தகைய அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.

ஆர்எஸ்எஸ் நூறாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த மோகன் பகவத், “ஆர்எஸ்எஸ் மற்றும் மத்திய அரசுக்கு இடையே முரண்கள் இருக்கலாம். ஆனால் அது சண்டை என்று பொருள் கொள்ள முடியாது. எங்களுக்கிடையே சண்டை இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது:“மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் எங்களுக்குச் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது. சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால் அதனை சண்டை என்று சொல்ல முடியாது.”

“பாஜக அரசின் அனைத்து முடிவுகளும் RSS-ன் கட்டளையின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன” என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்தார்.

“ஆர்எஸ்எஸ் யாருக்கும் கட்டாயப்படுத்தாது. நாங்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறோம். ஆட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பது பாஜக. அதில் அவர்கள் தான் நிபுணர்கள்.”

“நான் 50 ஆண்டுகளாக சகாவை நடத்தி வருகிறேன். யாராவது ஆலோசனை சொன்னால் கேட்பேன். அதுபோல அரசு. ஆனால் முடிவு எடுப்பது அவர்களின் பொறுப்பு.” என்று வலியுறுத்தினார்.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் 2024 தேர்தலுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் புதிய தலைவர் அறிவிக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டிய மோகன் பகவத்,
“பாஜக தலைமை குறித்த முடிவுகளை நாங்களே எடுத்து இருந்தால், இத்தனை நாட்கள் காத்திருப்போமா? அது பாஜக தீர்மானிக்க வேண்டிய விஷயம்” என விளக்கம் அளித்தார்.

மேலும், ஆர்எஸ்எஸை எதிர்த்து வந்த பலர் பின்னர் தங்களது பார்வையை மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஜெயப்பிரகாஷ் நாராயண் முதல் பிரணாப் முகர்ஜி வரை, பலர் எங்களை எதிர்த்து வந்தும் பின்னர் எங்களுடன் நல்ல உறவாகவே செயல்பட்டுள்ளனர்” என்றார்.

இதன் மூலம், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே “பெரிய மோதல்” உள்ளது என்ற அரசியல் வதந்திகளுக்கு மோகன் பகவத் தெளிவான முறையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“நாங்கள் ஒருங்கிணைந்தே செயல்படுகிறோம். சண்டை இல்லை” என்ற அவரது கூற்று, பாஜக – ஆர்எஸ்எஸ் உறவில் வெளிப்படையான விளக்கமாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is a fight but no Is it a fight between the BJP government and the RSS Mohan Bhagwat explanation


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->