பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: நாளை போக்குவரத்து மாற்றம்
Important announcement for the public Ganesha idol procession in Chennai Traffic changes tomorrow
சவிநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி மாநிலம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை நகரில் இந்து அமைப்புகள் சார்பில் மொத்தம் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இப்போது, இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடற்கரை பகுதிகளில் கரைக்கும் நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகர போக்குவரத்து போலீசார் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவித்துள்ளனர்.
போலீசார் ஏற்பாடு செய்துள்ள கரைப்பு மையங்கள்:
-
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம்
-
திருவான்மியூர் பல்கலை நகர்
-
காசிமேடு மின்பிடி துறைமுகம்
-
திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை
இந்த நான்கு கடற்கரை பகுதிகளில் பெரும்பாலான சிலைகள் கரைக்கப்பட உள்ளன.
போக்குவரத்து மாற்றங்கள்
போலீசார் அறிவித்துள்ள சாலை மாற்றங்கள் வருமாறு:
-
திருவல்லிக்கேணி → சாந்தோம் நெடுஞ்சாலை:
வாகனங்கள் காந்தி சிலை – ஆர்.கே.சாலை சந்திப்பு (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்ஷன், டி’சில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.
-
அடையார் → சாந்தோம் நெடுஞ்சாலை:
வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை, தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை, கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக செல்லலாம்.
-
ரத்னா கபே சந்திப்பு:
சிலை ஊர்வலம் நடைபெறும் நேரத்தில், ஜாம்பஜார் போலீஸ் நிலையம் → ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவை ஜானி ஜான்கான் ரோடு வழியாக மாற்றப்படும்.
-
ஐஸ்ஹவுஸ் சந்திப்பு:
சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும் வேளையில், ஐஸ்ஹவுஸ் சந்திப்பு → ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல முடியாது. அதற்கு பதிலாக பெசன்ட் ரோடு – காமராஜர் சாலை வழியாக அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி திருப்பப்படும்.
வணிக வாகனங்களுக்கு தடை
விநாயகர் சிலை கரைக்கும் இடங்களைச் சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளார்.
சிலைகள் கரைக்கும் நாளை, சாலைகளில் பெரும் கூட்டம் நிலவும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் போலீசார் அறிவித்துள்ள போக்குவரத்து வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
English Summary
Important announcement for the public Ganesha idol procession in Chennai Traffic changes tomorrow