ராஜஸ்தான் அமைச்சர் மகன் மீது புகார் அளித்த பெண் மீது மை வீச்சு..! - Seithipunal
Seithipunal


அமைச்சர் மகனின் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் மீது மைவீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. . இவரது மகன் ரோஹித் ஜோஷி மீது டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.  அவர் அளித்திருந்த புகாரில் எனக்கும் அவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அதன் பின் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை பல முறை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். தற்போது என்னை திருமணம் செய்ய மறுத்துள்ளார். திருமணம் செய்து கொள்ள கூறினால் அவர் கொலை மிரட்டல் வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

இந்த புகாரால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  அமைச்சரின் மகனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் மகன் மீது புகார் கூறிய பெண், இன்று தனது தாயாருடன் வெளியே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அந்தப் பெண் மீது கருப்பு மையை வீசிவிட்டு தப்பினர். 

அந்த மையில் ஏதேனும் திராவகம் கலக்கப்பட்டுள்ளதா என மருத்துவமனை சோதனை செய்தனர். ஆனால், அவை எதுவும் கலக்கபடவில்லை இந்த சம்பவம் குறித்து காவல்துறயினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Complaint against Rajastan Minister Son


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->