தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்க தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். 

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 9,624 கிராம ஊராட்சித் தலைவர், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர். 5 ஆயிரத்து 90 ஒன்றிய வார்டு உறுப்பினர்,515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 

திமுக 243 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களையும், அதிமுக 214 இடங்களையும் கைப்பற்றியது. 

2,099 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களை திமுகவும், 1,781 இடங்களை அதிமுகவும், கைப்பற்றின. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. 

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்பிற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில்  திமுக வழக்கு தொடர்ந்தது. 

திமுகவின் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பதவியேற்பை தடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றார்.

இதையடுத்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையையும் ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, தேர்தல் வழக்காக, சம்பந்தப்பட்ட நீதிபதி முன் வழக்குத் தொடரலாம் என்றார். இதையடுத்து நீதிபதி ஆதிகேசவலு முன் இந்த வழக்கு முறையிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Winners of elections are barred


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal