நிர்வாகிகள் அதிருப்தி! - ஓ.பி.எஸ். தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அணியை விட்டு வெளியேறுவோம்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த முறை தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என நான்கு முனைகள் போட்டியிடவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை இறுதி செய்வதில் வேகம் காட்டி வருகின்றன.

இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேருவார் என்பது முக்கிய பரபரப்பாக உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்பு, அவர் தனது கட்சி மூலம் உரிமை மீட்பு முயற்சி நடத்தி வருகிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேனி தொகுதியில் போட்டியிட்டார்.ஆனாலும், தற்போதைய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால், ஓ.பி.எஸ். அதில் சேருவது பற்றி எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை.

இதனால், ஓ.பி.எஸ். தனியாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதுவரை அவர் எந்த நிலையான முடிவையும் எடுக்கவில்லை; அதனால் அவரது முன்னாள் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்துள்ளனர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர் எம்.எல்.ஏ. அய்யப்பன் தி.மு.க.வுடன் நெருங்கிய ஆலோசனையில் இருப்பதாகவும், சில நாட்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஐ சந்தித்து வெளியில் வந்து அவரின் ஆட்சியை பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவர் தி.மு.க. கூட்டணிக்குள் நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.ஆனால், நீலகிரி மாவட்ட கூடலூரில் மாவட்ட செயலாளர் பாரதியார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகள் ஓ.பி.எஸ். தி.மு.க.வுடன் சேர்ந்தால், அவர்கள் அனைவரும் அணியை விட்டு வெளியேறும் என்று தீர்மானித்துள்ளனர்.

சென்னை ஆலோசனை கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்களில் 11 பேரும் மட்டுமே தி.மு.க.வை தேர்வு செய்தனர்; இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும், இல்லையெனில் த.வெ.க.வுடன் சேரும் வழியைத் தவிர வேறு வழி இல்லை என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தை மாதம் முடிந்து மாசி தொடங்கிய நிலையில், ஓ.பி.எஸ். தீர்க்கமான முடிவை எடுக்காமல் குழப்பத்தில் இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே சோர்வையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Administrators dissatisfied If OPS takes stance support DMK we leave team


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->