வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்: பீதியில் கிராம மக்கள்! - Seithipunal
Seithipunal


நீலகிரி, குன்னூர் அருகே உள்ள கிராம பகுதியில் கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் யானைகள் காட்டுக்குள் செல்லாமல் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து தஞ்சமடைந்து நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விலை நிலங்களை செய்தப்படுத்துதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் 5 காட்டு யானைகள் இன்று அதிகாலை 4 மணி அளவில் கிராமத்திற்குள் புகுந்து பழனியம்மாள் என்பவரின் வீட்டிற்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிசி, பருப்பு போன்ற பொருட்களை சூறையாடியுள்ளது. 

அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து காட்டு யானைகள் பக்கத்தில் இருந்த கிருஷ்ணகுமார் என்பவரின் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தபோது வீட்டிற்குள் இருந்தவர்கள் பின்வாசல் வழியாக சென்று அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீ பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மீண்டும் யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wild elephants looted house Villagers panic


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->