குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை…! இருவர் உயிரிழந்த சோகம்...! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தேவர்சோலை அருகே காரக்குன்னு பகுதியை சேர்ந்த ரவி (60) மற்றும் லிங்கன் நேற்று தேவர்சோலை நகருக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திரும்பி வந்தனர்.

இரவு சுமார் 8.30 மணியளவில் காரக்குன்னு அருகிலுள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் நடந்து சென்றபோது, வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்தது.

இதனை அறியாமல் சென்ற இருவரையும் யானை திடீரென வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் தப்பிக்க முயன்றாலும், யானை தாக்கி தூக்கி வீசியதில் இருவரும் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரவு நேரம் என்பதால் இந்த சம்பவம் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. இன்று அதிகாலை வேலைக்கு வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்க முயன்றனர்.ஆனால், அப்பகுதி மக்கள் ஏராளமாக திரண்டு உடலை எடுக்க அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நடமாடும் யானையை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wild elephant enters residence Tragic death two people


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->