சிகிச்சை பெற்று வந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை! கணவனுக்கு வலை வீசி வரும் போலீசார்...!
Wife stabbed to death while undergoing treatment Police are casting a net for her husband
கரூர் மாவட்டத்தில் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் குளித்தலை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஸ்ருதி என்ற 27 வயது பெண்ணை அவரது கணவரான ''விஸ்ரூத்'' கத்தியால் மூன்று முறை குத்தியதில் ஸ்ருதியின் உயிர் பரிதாபமாக பறிபோனது.
இதில் இதற்குமுன்பே, தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை காவலர்கள் தேடி வருகின்றனர்.
மேலும், அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
English Summary
Wife stabbed to death while undergoing treatment Police are casting a net for her husband