கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. காதலர்களை ஏவி கொலை செய்த மனைவி..!
Wife killed husband in Ramanathapuram
கள்ளகாதலை தட்டி கேட்ட கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சிங்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைகனி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நேரத்தில் சாந்தியின் சகோதரர் முறையுள்ள பார்த்திபன், கலைமோகன் என்ற இருவருடன் முறையற்ற தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிச்சைகனிக்கு விஷயம் தெரியவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சாந்தி கள்ளகாதலர்களுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, மதுபோதையில் இருந்த அவரை பார்த்திபன், கலைமோகன் இருவரும் அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர், இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Wife killed husband in Ramanathapuram