லிவிங் டுகெதரில் காதல் கணவன்: கையும் களவுமாக பிடித்த மனைவி: காதலிக்கும் மனைவிக்கு சண்டை..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமிநகரை சேர்ந்தவர் 45 வயது லோகநாதன். வஉசி நகரை சேர்ந்த 40 வயது கலைச்செல்வி, பொறியியல் பட்டதாரி.இவர்கள் இருவரும் காதலித்து வந்தநிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தில் பெண் வீட்டாரின் வரதட்சணையாக 43 சவரன் தங்கநகைகள், 02 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு 09 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில்,  கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அத்துடன் காதல் கணவர் வரதட்சணையாக பணம் நகை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கலைச்செல்வி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். குறித்த தம்பதி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன்படி, முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில், முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு பெண்ணுடன் லோகநாதன் புதுப்பேட்டையில் தனிகுடித்தினம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து அறிந்த மனைவி கலைச்செல்வி புதுப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு நேரில் சென்று கையும்களவுமாக அவர்களை பிடித்து கூச்சல்லிட்டு வீட்டுக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைச்செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பூட்டை திறந்து லோகநாதனை வெளிய வர வைத்துள்ளனர். அப்போது லோகநாதனுடன் வீட்டுக்குள் இருந்த பெண்ணுக்கும் மனைவி கலைச்செல்விக்கும் இடையில் கராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவர்கள் லிவிங் டுகெதராக வாழ்வதாக அந்த பெண் கூறியதால் தகராறு முற்றியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். பின்னர் லோகநாதனை புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விவாகரத்து வழக்கு நீதிமன்றதில் நிலவையில் உள்ளதால் போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife catches husband red handed with another woman in living together


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->