'கோல்ட்ரிப்' மருந்தை தயாரிக்க அனுமதி அளித்தது யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!
Who authorized the production of the Goldtrip medicine? Shocking news revealed
15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்புக்கு காரணமான 'கோல்ட்ரிப்' மருந்தில் மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தும் 'டை எத்திலின் கிளைகால்' என்ற உயிர்கொல்லி ரசாயனம் 48 சதவீதத்திற்கும் அதிகமாக கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவையே உலுக்கும் வகையில் கடந்த மாதம் இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 1 முதல் 7 வயது வரை உள்ள 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயல் இழப்பால் அடுத்தடுத்து மாண்டு போனார்கள்.
உடனடியாக இறப்புக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டபோது பலியான அத்தனை குழந்தைகளும் இருமல் நோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் என்பதும், இருமல் குறைய 'கோல்ட்ரிப்' என்ற மருந்தை உட்கொண்டதும் தெரியவந்தது.
'கோல்ட்ரிப்' என்ற இந்த இருமல் மருந்து காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து கம்பெனியில் தயாரிக்கப்பட்ட மருந்தாகும். உடனடியாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த மாதம் மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் தினேஷ்குமார் மவுரியா, தசம்மந்தப்பட்ட மருந்து கம்பெனியில் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.
உடனடியாக, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் ஸ்ரீ சென் பார்மா மருந்து கம்பெனியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்புக்கு காரணமான 'கோல்ட்ரிப்' மருந்தில் மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தும் 'டை எத்திலின் கிளைகால்' என்ற உயிர்கொல்லி ரசாயனம் 48 சதவீதத்திற்கும் அதிகமாக கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, மருந்து கம்பெனியின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. தற்போது, கோல்ட்ரிப் இருமல் மருந்தை மருத்துவர்கள் யாரும் பரிந்துரைக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
48 சதவீதத்துக்கும் அதிகமாக டை எத்திலின் கிளைகால் ரசாயனம் உள்ள கோல்ட்ரிப் மருந்தை எப்படி விற்பனைக்கு வந்தது?. அதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.
English Summary
Who authorized the production of the Goldtrip medicine? Shocking news revealed