அதிமுகவா? திமுகவா? எந்தப் பக்கம் சேர்கிறது தேமுதிக? பிரேமலதாவின் ’ப்ளான் பி’ இதுதான்! தேமுதிக அடுத்த முடிவு எது? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் அரசியல் களம் தற்போது தீவிரமாக சூடேறி வருகிறது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, எந்த கூட்டணியில் தேமுதிக இணைகிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தற்போதைக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிடமும் சம தூரத்தில் இருக்கிறார். “கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்” என்ற அவரது ஒரு வாக்கியம் அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிலிருந்தும் திமுகவிலிருந்தும் தேமுதிகவுக்கு அழைப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இரு தரப்பும் பிரேமலதாவை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு அரசியல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் பிரேமலதாவின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இது அரசியல் மரியாதையாகத் தோன்றினாலும், அதற்குள் கூட்டணிக் கணக்குகள் தெளிவாக இருக்கின்றன.

முன்னதாக ராஜ்யசபா சீட் பிரச்சினை காரணமாக அதிமுகவுடனான உறவு முறிந்ததே தேமுதிகவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பிரேமலதா திமுகவுடனும் நெருக்கம் ஏற்படுத்தினார். ஆனால் சமீபத்தில் திமுக அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை கடுமையாக விமர்சித்தது, இரு தரப்புகளையும் சம தூரத்தில் வைக்கும் அரசியல் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக தற்போது பாமக, தவெக ஆகிய கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சிக்கிறது. தேமுதிகவும் அதிமுகவுடனான கதவை அடைக்காமல், அதே சமயம் திமுகவுடனான வாய்ப்பையும் திறந்துவைத்திருக்கிறது.

அரசியல் அங்கீகாரம் பெற, 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 8 எம்எல்ஏக்கள் தேமுதிக வெற்றி பெற வேண்டும். அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் குறைந்தது 10 தொகுதிகள் உறுதி என பிரேமலதா நம்புகிறார். காரணம் — விஜயும், பாமகவும் அதிமுக கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் இருப்பதால், வட மாவட்டங்களில் தேமுதிக வாக்கு வங்கி வலுப்பெறும்.

அதே சமயம், அதிமுகவுடனான வாய்ப்பு இல்லையெனில், திமுக கூட்டணியில் சேர்ந்து அதிக தொகுதி பங்கீடு பெற்றுக்கொள்ளலாம் என பிரேமலதா தன்னுடைய கணக்கை போடுகிறாராம். அவருக்குப் பொறுத்தவரை இப்போதைய முக்கிய இலக்கு 10 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டுதான்.

அதனால், பிரேமலதா எந்த கூட்டணியும் வெற்றி கூட்டணியாக மாறும் என்று உறுதி வரும் வரை காத்திருக்க முடிவு செய்திருக்கிறார். இதன் அடிப்படையில், ஜனவரி மாதமே தேமுதிக கூட்டணி முடிவை அறிவிக்கும் முக்கிய நேரமாக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which side is DMDK joining This is Premalatha Plan B What is the next decision for DMDK


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->