மனதை புண்படுத்தும், வேண்டாம்! உதயநிதிக்கு அறிவுரை வழங்கிய மம்தா!  - Seithipunal
Seithipunal


இந்திய வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. எந்தவொரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் செயலிலும் நாம் ஈடுபடக்கூடாது என்று, திமுக அமைச்சர் உதயநிதிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுரை வழங்கியுள்ளார்.

சனாதனத்தை ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்

மேலும், சனாதனத்தை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், உதயநிதி தனது கருத்திலிருந்து லேசாக  பின்வாங்கினார். 

கடைசியாக உதயநிதி அளித்த அந்த பேட்டியில், நான் இந்து மதத்தை மட்டும் சொல்லவில்லை, அனைத்து மதத்தையும் (இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம்..etc) சேர்த்துதான் என்று சொன்னேன். இந்து மதத்தை நான் எதிர்க்கவில்லை என்று தெளிப்படுத்தினார்.

இந்நிலையில், உதயநிதியின் சர்ச்சை பேச்சு குறித்து 'இண்டி' கூட்டணியில் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் இந்திய நாட்டில் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு. 

அந்த மக்களின் உணர்வுகளை பாதிக்கும் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் வகையிலான செயல்களில் நாம் ஈடுபடக்கூடாது" என்று உதயநிதிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal CM advise to Udhaynithi Stalin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->