அந்தஅளவிற்கு விட்டுவிட மாட்டோம்..மேகதாது அணை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்!
We wont give up on that. Minister Duraimurugan responds to Mekedatu dam issue
கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எது வேண்டுமானாலும் செய்யும். ஆனால் எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது என்றும் அந்தளவிற்கு விட்டுவிட மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவிவருகிறது,மேலும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி நதி நீர் பங்கீடு குழு அமைக்கப்பட்டது.இதையடுத்து கர்நாடகம் ,தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நதி நீரை பங்கீடு செய்து வழங்கிவருகிறது.மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.அதன்படி மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படும்,ஆகையால் மேகதாது அணை கட்ட விடாமல் தமிழகம் தடுத்து வருகிறது.இதுமட்டுமில்லாமல் மேகதாது அணை தொடர்பான வழக்கும் சுப்ரிம் கோர்டில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் 2025-26 நிதி ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதல் மந்திரி சித்தராமையா கர்நாடக பட்ஜெட் டை தாக்கல் செய்து பேசும்போது: மேகதாது நீர்தேக்கத்திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் மேலும் மத்திய அரசின் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என கூறினார்.
.
இந்நிலையில், காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, மேகதாது அணைகட்ட எத்தனை ஆயத்த பணிகளை முடித்து இருந்தாலும் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என கூறினார்.
மேலும் மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக போகாது. ஆகையால், சித்தராமையா சொல்வது சட்டத்துக்கு புறம்பானது என பேசிய அமைச்சர் துரைமுருகன்,கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எது வேண்டுமானாலும் செய்யும். ஆனால் எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது என்றும் அந்தளவிற்கு விட்டுவிட மாட்டோம். சட்டம், நம் பக்கம் இருக்கிறது என்றும் நியாயமும் நம் பக்கம் இருக்கிறது என தெரிவித்தார்.
https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDirectorsbr%2Fposts%2Fpfbid02Zr3AFubnXjQQixwPHF2y1qm9DQwN5BHQnPNZmbaamsTntqa3P6gedxc1c6pNFuu4l&show_text=true&width=500
English Summary
We wont give up on that. Minister Duraimurugan responds to Mekedatu dam issue