தொடரும் தென்மேற்கு பருவமழை: நீலகிரி மாவட்டம், ஊட்டி அணைகளில் நீர்மட்டம் உயர்வு..!
Water level in Ooty dams rises due to continuous rains in the Nilgiris district
கடந்த 20 நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க பயன்படும் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.
அங்கு தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து அணைகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. அத்துடன், பார்சன்ஸ் வேலி அணை, ஊட்டி டைகர்ஹில், மார்லிமந்து போன்ற அணைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது. இதனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு தண்ணீர் வழங்க முக்கிய ஆதாரமாக உள்ள பார்சன்ஸ் வேலி அணை பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால், அந்த அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஊட்டி நகராட்சிக்குட்பட்பட்ட பெரும்பாலான அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளதால், ஓரிரு மாதங்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
English Summary
Water level in Ooty dams rises due to continuous rains in the Nilgiris district