தமிழகத்தில் 02 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை; மாலை 04 மணி முதல் 09 மணிவரை மின்சாரம், இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் இடம்பெறும்..!
Wartime security drill at 02 places in Tamil Nadu from 04 pm to 09 pm
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாகுதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இரு நாடுகளும் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில், எல்லை கிராமங்களில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளை (07ஆம் தேதி) நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 02 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அதேபோல், நாளை மாலை 04 மணி முதல் இரவு 09 மணி வரை இந்தப் போர்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் போது மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக வான்வழி தாக்குதலின் போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் போர் ஒத்திகை நடைபெற இருக்கிறது. அத்துடன், சில பொது இடங்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டு, ஒத்திகை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த போர் கால பாதுகாப்பு ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடைசியாக கடந்த 1971- ஆம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறஉள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Wartime security drill at 02 places in Tamil Nadu from 04 pm to 09 pm