வக்ப் வாரிய திருத்த சட்ட வழக்கு: மே 15-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு..!
Waqf Board Amendment Act case Court adjourns hearing to May 15th
வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மே 15-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது. குறித்த வழக்கில் சொத்துரிமை, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி கொள்கைகள் தொடர்பான சர்ச்சைகளை உள்ளடக்கியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், இன்று வழக்கு விசாரணையின் சஞ்சீவ் கன்னா தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கு மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு இந்த விவகாரத்தில் நீண்ட விசாரணை தேவைப்படும் எனவும், கடந்த விசாரணையில், வக்ப் சட்டத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை அமர்வு கவலை தெரிவித்ததை அடுத்து, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு உறுதியளித்தது.
அத்துடன், மனுதாரர்களால் சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதைக் கையாள வேண்டும் எனவும், அந்த அடிப்படையில் புதிய தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் விசாரிப்பதற்காக வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நீதிபதி தெரிவித்தார்.
English Summary
Waqf Board Amendment Act case Court adjourns hearing to May 15th