வாக்காளர் பட்டியல் மாறுபாடு! - தேர்தல் ஆணையம் விளக்கம் உயர்நீதிமன்றம் தீவிர விசாரணை...!
Voter list discrepancy Election Commission explanation High Court to conduct serious investigation
சென்னை தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் மாற்றம் குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவரின் மனுவில், தி.மு.க.விற்கு அரசியல் ஆதரவாக, தி.நகர் தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவாளர்களாகிய 13,000 பேரின் பெயர்கள் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால், தேர்தல் முறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலின் “சிறப்பு தீவிர திருத்தம்” அடுத்த வாரம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனை முன்னிட்டு, சத்தியநாராயணன் அளித்த புகாரும் அந்த திருத்தத்தின் போது விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பீகாரில் SIR வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Voter list discrepancy Election Commission explanation High Court to conduct serious investigation