கன்னியாகுமரி : விவேகானந்தர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து நேரம் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : விவேகானந்தர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து நேரம் மாற்றம்.!

சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கன்னியாகுமரி உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான பயணிகள் வந்து கடலின் அழகை பார்த்துச் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கடலின் நடுவில் பாறையில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லம் மற்றும் திருவள்ளுவர் சிலை படகின் மூலம் சென்று பார்த்து ரசிக்கின்றனர். 

அதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தர் என்று மொத்தம் மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படகுகள் தினமும் காலை எட்டு மணிக்கு படகு தளத்தில் இருந்து புறப்படும்.

இந்த நிலையில், வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்த்து வருகின்றனர். 

இதற்கிடையே கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொள்ளும் விதத்திலும், பூம்புகார் கப்பல் கழக பணியாளர்கள் தரிசிக்கும் வகையிலும் நாளை ஒருநாள் மட்டும் எட்டு மணிக்குப் பதிலாக பத்து மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு படகுப் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vivekanadar statue boat timing change tomarrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->