இறப்பதற்கு முன்பு அஜித்திடம் விவேக் வைத்த கோரிக்கை.! நிறைவேற்றுவாரா தல அஜித்.!  - Seithipunal
Seithipunal


தனது நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகர் விவேக். இவருடைய கருத்துக்கள் மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக தனது நடிப்பால் உயர்த்தியதால் அவர் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 

நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 04.35 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கின்றார். இவருடைய மறைவுக்கு அவரது ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அப்துல்கலாமின் விசுவாசியாக இருந்த விவேக் சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நடித்திருக்கும் காமெடி கலாட்டா மிகவும் ரசிக்கும் விதமாக இருந்தது. இறுதியாக ஒரு பிரபலம் விவேக்கிடம் ஒரு சவால் விட வேண்டும் என்றால் யாருக்கு விடுவீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு விவேக் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அதாவது, "அஜித் தனது ரசிகர்கள் அனைவரையும் ஒரு மரம் நட சொல்ல வேண்டும், இதுதான் அந்த சவால். அஜித் தனது வாயால் கூறவில்லை என்றால் கூட ஒரு அறிக்கை விட்டால் கூட போதும், தல அஜீத்துக்காக உயிரையே கொடுக்கும் ரசிகர்கள் மரம் நடுவது சாதாரண விஷயம் தானே. பொறுத்து இருந்து பாருங்கள் தல ரசிகர்களின் ஆட்டத்தை." என்று தெரிவித்தார். 

விவேக்கின் இந்த வேண்டுகோளை அஜித் செய்தால் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது. அவரது ஆத்மா சாந்தியடையும் என்று தற்போது பலரும் தல அஜித்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vivek request to thala ajith


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->