பக்கத்து வீட்டு தோழியின் திருட்டுத்தனம்... வாய் சாவுடலுக்கு பேசி, வம்படியாக நகையை பறிகொடுத்த பெண்மணி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகிருபா. இவரது வீட்டிற்கு கடந்த 10 ஆம் தேதி விசேஷத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வருவது போல வந்த நான்கு இளைஞர்கள், வீட்டில் தனியாக இருந்த ஜெய கிருபாவை கத்தியை காட்டி மிரட்டி, கை கால்களை கட்டி போட்டு கழுத்தில் இருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தமாக 35 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது. 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர். இதில், அங்குள்ள நேரு நகரைச் சார்ந்த கணேஷ் குமார் என்பவரின் அடையாளம் பதிவாகியுள்ளது. மேலும், இவர் கொள்ளை நடந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளார். 

இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை செய்ததில், அருண் பாண்டியன் என்ற இளைஞரை கை காண்பித்துள்ளார். அருண் பாண்டியனை கைது செய்து விசாரணை செய்கையில், கொள்ளை சம்பவம் முத்துலட்சுமி என்ற பெண்மணியால் அரங்கேறியதும், அவர் தான் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக இருந்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. 

முத்துலட்சுமி பணத்தேவையின் காரணமாக அவதியுற்று வந்த நிலையில், ஜெயகிருபா தனது வீட்டில் இருந்த நகைகளை வங்கியில் அடகு வைத்துள்ளதையும், அதனை தற்போது மீட்டுக்கொண்டு வந்த கதையையும் பெருமையாக கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயாவின் நகையை கொள்ளையடித்து பணத்தேவையை பூர்த்தி செய்ய நினைத்த முத்துலட்சுமி, தனது ஆண் நண்பர்களான அருண்பாண்டியன், கணேஷ்குமார், சோலைசாமி, ஹரிஹரன் ஆகியோரை மூளைச்சலவை செய்து கொள்ளை சம்பவத்தை நடத்தியதும் தெரியவந்துள்ளது. இவர்கள் ஐவரையும் கைது செய்த காவல்துறையினர், விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Aruppukkottai Robbery Police Arrest Gang


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal