சென்னை கோட்டூர்புரத்தில் கொடூர மோதல்…! - சட்டக்கல்லூரி மாணவி உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்!
Violent clash Kotturpuram Chennai Law student dies 4 injured
சென்னை நகரின் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள காந்தி மண்டபம் சாலையில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பாக சென்ற கார் எதிர்பாராத விதமாக திடீரென திரும்பியதால், பின்னால் வந்த மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி, இரண்டு வாகனங்களும் பலத்த விபத்தில் சிக்கின.

இந்த கொடூர மோதலில், கேரளாவைச் சேர்ந்த 21 வயது சட்டக்கல்லூரி மாணவி ஜூனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் நான்கு பேர் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டனர்.மேலும், காயமடைந்தவர்களில் கார் ஓட்டுநரும் அடங்குவர்.
அவர்கள் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், விபத்தின் காரணங்களை ஆராய்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Violent clash Kotturpuram Chennai Law student dies 4 injured