விழுப்புரம் சிறுமி ஜெய ஸ்ரீ பலி விவகாரம்... அதிரடி நடவடிக்கை எடுத்த இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுமதுரை பகுதியை சார்ந்தவர் ஜெயபால் என்பவரது மகளின் பெயர் ஜெய ஸ்ரீ (வயது 15). சிறுமி ஜெய ஸ்ரீ அங்குள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், இவரது பெற்றோர் நேற்று வெளியூருக்கு சென்றுள்ளார். 

சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில், வீட்டில் இருந்து கரும் புகை அதிகளவு வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்க்கையில், சிறுமியின் உடலில் தீப்பற்றி இருந்துள்ளது. சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கவே, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதியிடம் இதே கிராமத்தை சார்ந்த கணபதி என்பவனின் மகன் முருகன் (வயது 51) மற்றும் கந்தசாமி என்பவனின் மகன் யாகசம் என்ற கலியபெருமாள் (வயது 60) பெட்ரோல் ஊற்றி எரித்தாக வாக்கு மூலம் தெரிவித்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்கு சிறுமி சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பெட்டோர்களின் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

சிறுமி முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டதும், சிறுமியை கொலை செய்த இருவரும் அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்த நிலையில், விழுப்புரம் சிறுமதுரை புதுகாலணி கிளை கழக செயலாளர் கலியபெருமாள் மற்றும் விழுப்புரம் சிறுமதுரை காலனி கிளை கழக மேலமைப்பு பிரதிநிதி முருகன் கட்சியில் இருந்து நீடிக்கும் செய்து அறிவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதன் காரணமாக இரண்டு பேரையும் நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram child murder case OPS and EPS dismiss party member


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->