காதலித்து ஏமாற்றிய விக்ரமன்- ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பெண் வழக்கறிஞர்!
Vikraman cheated in love woman lawyer exposed with evidence
விசிக கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளருமான விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, ஆதாரத்துடன் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்கனவே இவர் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகாரளித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருடன் உரையாடிய ஸ்கிரீன் ஷாட்டையும் புகைப்படங்களையும் தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் கிருபா முனுசாமி.
விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னுடைய பணத்தில் ஐபோன், ஆப்பிள் வாட்ஸ் என பல விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் விக்ரமன் அவர் வாங்கிய காருக்கு கூட தன்னை பணம் செலுத்த கூறி வற்புறுத்தியதாகவும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்றும் அதற்காக ஆப்பிள் லேட்பாப் வாங்கி தரும் படி அவர் கேட்டதாகவும், ஆனால் தான் வாங்கிகொடுக்க மறுத்து விட்டதாகவும் கிருபா முனுசாமி தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கிருபா முனுசாமியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Vikraman cheated in love woman lawyer exposed with evidence