ஆந்திராவில் சிரஞ்சீவிக்கும்,தமிழ்நாட்டில் விஜயகாந்த்க்கும் ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கு ஏற்படும் - செல்வப்பெருந்தகை - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது த.வெ.க குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தபோது,
விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றார். விருத்தாச்சலத்தில் அவர் எம்.எல்.ஏ. ஆனார். ஆனால் அந்தக் கட்சி இன்று எப்படிப்பட்ட நிலையில் உள்ளது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

விஜயகாந்த் நல்ல சித்தாந்தங்களையும் கருத்துகளையும் மட்டுமே பேசினார். யாரையும் வசைபாடவில்லை,” என்றார்.

மேலும், “சிரஞ்சீவியும் ஒரு காலத்தில் கட்சி தொடங்கினார். 20 லட்சம் பேர் கலந்து கொண்டதாகக் கூறினார்கள். ஆனால் இறுதியில் அந்தக் கட்சி காங்கிரசுடன் இணைந்துவிட்டது. இன்று அந்தக் கட்சி தனித்துவமாக இருக்கிறதா என்றால் இல்லை.

இதேபோல பல கட்சிகளின் கதைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay will face the same fate as Chiranjeevi in ​​Andhra Pradesh and Vijayakanth in Tamil Nadu Selvapperunthagai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->