திருச்சியில் விஜய்:  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு! - Seithipunal
Seithipunal


விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் நிபந்தனைகளை மீறினால், பரப்புரையை இடைநிறுத்த காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய் இன்று (12.09.2025) திருச்சி வந்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார். இதற்காக நவீன வசதிகள் கொண்ட சிறப்பு பிரசார பஸ் பயன்படுத்தப்பட உள்ளது. அந்தப் பஸ்சில் இரும்பு வேலிகள், கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இன்று விமான நிலையத்திலிருந்து பிரசார பஸ் புறப்பட முயன்றபோது, தொண்டர்கள் பெருமளவில் சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

முன்னதாக, இந்த பிரசாரத்துக்கான இலச்சினை (லோகோ) த.வெ.க. வெளியிட்டது. அதில் “உங்க விஜய் நான் வரேன்”, “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது”, “வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

பிரசார வாகனம் நேற்று மாலை பனையூரில் இருந்து திருச்சியை நோக்கி புறப்பட்டது. இன்று திருச்சியில் இருந்து விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த பிரசாரம் 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நம்புகின்றனர்.

இதேவேளை, விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் 25 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

அரியலூர் பகுதிக்குள் காவல் துறையின் விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

பரப்புரை சாலை வலம் (ரோடு ஷோ) ஆக நடக்கக் கூடாது.

எந்த இடத்திலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக் கூடாது.

தலைவரின் வாகனத்திற்குப் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் செல்லக் கூடாது.

பொதுமக்கள் சிரமமின்றி பார்க்க தடுப்பு அரண்களை கட்சியே அமைக்க வேண்டும்.

நிபந்தனைகளை மீறினால், பரப்புரையை இடைநிறுத்த காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay in Tiruchirappalli Enthusiastic welcome from the fans


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->