விஜய் திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா? - அமைச்சர் அன்பில் மகேஷ்
Vijay doesnot see the development of Trichy Minister Anbil Mahesh
திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் த.வெ.க தலைவர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார்:“கேக்கலையா, கேக்கலையா என்று கேட்கும் விஜய், திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், திருச்சியில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக, கல்லூரி, டைடல் பார்க், அங்காடி, பேருந்து முனையம், ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதோடு, நூலகம் மற்றும் அறிவுசார் மையம் போன்ற பொதுப்பயன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இதன் மூலம், திருச்சியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
Vijay doesnot see the development of Trichy Minister Anbil Mahesh