ஆபாச வீடியோ..இளம்பெண்ணுக்கு தொல்லை..கடைசியில் கம்பி எண்ணும் வாலிபர்!
Video Trouble for a young girl Finally the young man counting the wire
ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முகமது ஆசிப் ஆன்லைன் செயலி மூலம் சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அறிமுகம் ஆனார். 25 வயதான முகமது ஆசிப் அப்போது அந்த இளம்பெண் நட்பின்பேரில் தனிப்பட்ட பதிவுகளை பகிர்ந்துள்ளார். இதனனை தனக்கு சாதகமாக்கி கொண்ட அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 2024-ம் ஆண்டு அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிப்பை கைது செய்தனர்.
இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை முடித்து சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை முறையாக ஆஜர் செய்தனர்.இந்தநிலையில் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து மாஜிஸ்திரேட்டு ராம்குமார் தீர்ப்பு வழங்கினார்.
அதில் முகமது ஆசிப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 டி-யின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், வழங்கப்படும் என்று கூறினார் .மேலும் பிரிவு 354 டி-யின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
English Summary
Video Trouble for a young girl Finally the young man counting the wire