தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? - நாளை வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!
venkatraman appointed new tamilnadu dgp
தமிழகத்தின் தற்போதைய போலீஸ் டி.ஜி.பி.யாக இருப்பவர் சங்கர் ஜிவால். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி டிஜிபியாக பதவியேற்ற நிலையில், அவருடைய பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், புதிய டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள நாகபட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர் வெங்கட்ராமன். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக கேடரில் 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30ம் தேதி வெளிநாடு செல்ல உள்ள நிலையில், இவர் அதற்கு முன்னதாக அதாவது நாளை 29ம் தேதி புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
venkatraman appointed new tamilnadu dgp