விஜய் பேசியது தப்பில்லை - பரபரப்பை கிளப்பிய கே.எஸ். ரவிக்குமார்.!
director ks ravikumar speech about tvk leader vijay
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதுமட்டுமல்லாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய்யின் பேச்சுக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது," நான் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நிறைய முறை சென்று இருக்கிறேன். நானே வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று தான் சொல்வேன். அங்கிள் என்பது தவறான வார்த்தை கிடையாது. விஜய் பேசியது எனக்கு தவறாக படவில்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
director ks ravikumar speech about tvk leader vijay