சென்னை உயர்நீதிமன்றத்தின் 58 ஆவது நீதிபதியாக வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன் நியமனம்.! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தில் கடந்த 17ஆம் தேதி கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக எட்டு பேரை நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

அதில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி உள்ளிட்ட மூன்று மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், ராமசாமி நீலகண்டன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. 

இவர்களில், விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பிப்ரவரி 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணனை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venkatachari Lakshmi Narayanan appointed as 58th judge of ChennaiHC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->