தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக வெங்கடராமன் பதவியேற்பு.!
vengadaraman oath new dgp of tamilnadu
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால் மற்றும் தமிழக காவல் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட இருவரும் இன்று ஓய்வு பெறுகிறார்கள். இதைமுன்னிட்டு அவர்கள் இரண்டு பேருக்கும் நேற்று முந்தினம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெரும் சங்கர் ஜிவாலுக்கு தமிழக காவல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணியை பாராட்டும் விதமாக அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் புதிய பணியை அவர் வருகிற 1-ந் தேதி அன்று சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறார்.
இந்த நிலையில், தமிழக காவல் துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து சங்கர் ஜிவால் தனது பொறுப்புகளை பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்கும் வெங்கடராமனிடம் ஒப்படைத்துள்ளார்.
இதேபோன்று தமிழ்நாடு தலைமையக டிஜிபி வினீத் தேவ் வான்கடே தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரும் தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
English Summary
vengadaraman oath new dgp of tamilnadu