வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர்:  சோதனையில் சிக்கியது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


வீட்டுத் தோட்டத்தில் ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் காய வைத்த மான் இறைச்சி கத்தி போன்றவற்றையும் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கீழ் சேலதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வித்தியாசமான செடிகளை வளர்த்து வருவதாகவும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரித்திருக்கிறார்கள்.

பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுவாகச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததைக் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மேலும் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் காய வைத்த மான் இறைச்சி கத்தி போன்றவற்றையும் கண்டறிந்து வனத்துறை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், "தேனாடுகம்பை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 64 வயதான கண்ணன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் ரகசியமாக 12 கஞ்சா செடிகளை வளர்த்து வந்திருக்கிறார். அதோடு 300 கிராம் கஞ்சாவும் வைத்திருந்தார்.என அதிகாரிகள் தெரிவித்தனர் .வீட்டில் காய வைத்த மான் இறைச்சி கத்தி ,கஞ்சா போன்றவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்துள்ள சம்பவம் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Person who grew cannabis plants at home How did they get caught in the investigation? Shocking information released


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->