விஜய் மீதும் தவறு ,ரசிகர்கள் மீதும் தவறு..சொல்கிறார் வேல்முருகன்!
Velmurugan saysBoth Vijay and the fans are at fault
விஜய் மீதும் தவறு இருக்கு.. விஜய் ரசிகர்கள் மீதும் தவறு இருக்கு.. சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் மீதும் தவறு இருக்கு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் எம்.எல்.ஏ கூறினார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாவது:-30 பேர் இறந்துட்டாங்க, உங்க கருத்து என்னனு பத்திரிகையாளர்கள் கேக்குறாங்க. திரும்பிக் கூட பார்க்காம தனி விமானத்தில் ஏறி, சென்னை போறாரு விஜய். இது ஏற்புடையதா? என கேள்வி எழுப்பினார்
மேலும் பேசிய அவர் ,8.45-க்கு நாமக்கல்ல இருக்கணும். 8.45-க்கு தான் சென்னைலயே கிளம்புறீங்க. தனி விமானம் லேட்டா வந்துச்சா? காலதாமதமா வராம இருந்திருந்தா, தண்ணி, உணவு இல்லாம மக்கள் செத்திருப்பாங்களா? என்று வருத்தமாக பேசிய MLA வேல்முருகன் ஆகவே, விஜய் மீதும் தவறு இருக்கு.. விஜய் ரசிகர்கள் மீதும் தவறு இருக்கு.. சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் மீதும் தவறு இருக்கு.இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Velmurugan saysBoth Vijay and the fans are at fault