சூர்யா ரசிகர் மன்ற தலைவரின் மனைவி தர்ணா.. கள்ளகாதலியுடன் குடித்தனம் நடத்தும் கணவரை மீட்க கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலியுடன் குடித்தனம் நடத்தி வரும் வேலூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவரான கணவரை மீட்டுத்தரக்கூறி, மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை பாரதியார் நகரை சார்ந்தவர் சங்கீதா (வயது 30). இவர் நேற்று காலை வேலூர் அண்ணா சாலையில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த நிலையில், தனது குழந்தையுடன் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

காவல் துறையினர் அவரிடம் செய்த விசாரணையில், " எனது பெயர் சங்கீதா. எனக்கும், காகித பட்டறை பகுதியை சார்ந்த சத்யா என்ற சத்யமூர்த்தி (வயது 35) என்பவருக்கும், கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. 

அவர் வேலூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். எங்கள் இருவருக்கும் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், சத்தியமூர்த்திக்கு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே, பெங்களூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். 

இந்த விஷயம் எனக்கு தெரியவந்ததை அடுத்து, அவரது தாயாரிடம் தெரிவித்தும் பலனில்லை. மாறாக என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்கள் மீறி தயவு செய்து நடவடிக்கை எடுத்து, என் கணவரை திருத்தி என்னுடன் அனுப்பி வையுங்கள் " என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காவல் துறையினர் இது குறித்து விசாரணை செய்வதாக உறுதியளித்தாலும், ஏற்கனவே தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தபோதும் இதனையே தெரிவித்து இருந்ததாக சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Wife Dharna Protest Save and Join my Husband Police Investigation He is Surya Fans Club Admin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal