வேலூர் மாநகராட்சி | கைப்பம்புடன் கால்வாய் சுவர் அமைத்த அவலம்.!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாநகராட்சியில் சுமார் 1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் அனைத்து வார்டுகளிலும் முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாளா சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், வேலூர் மாநகராட்சி  விஜயராகவபுரத்தில் அடி பம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாயின் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் இந்த செயலால் அடிப்பம்பை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். 

அடி பம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று மாநகராட்சியின் அலட்சியமான பணிகளால் ஸ்மார்ட் சிட்டியின் கட்டுமான தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Municipal Corporation building a canal wall with a hand pump


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->