“திராவிட சூடு டெல்லியையும் ஆடவைக்கிறது… திமுகவை எப்படியும் ஒழிக்க பாஜக திட்டம் தீட்டுகிறது” — உதயநிதி ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


பீகார் தேர்தலில் NDA கூட்டணி பெற்ற வெற்றியை தொடர்ந்து, பாஜக தனது கவனத்தை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திருப்பியுள்ள சூழலில், திமுக இளைஞரணி செயல்தலைவர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான பதிலை பதிவு செய்துள்ளார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக போராட்டத்தாலும் தியாகத்தாலும் உருவான இயக்கம் என்றும், புதிய கட்சிகள் வரலாறு இல்லாதவை என்றும் வலியுறுத்தினார்.

உதயநிதி கூறியதாவது:“திராவிட இயக்கம் என்னவென்பதே தெரியாத எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கை கோர்த்து திராவிட கொள்கையை அழிக்க முயற்சிக்கிறார்.”

“தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சி… டெல்லியிலும் திமுக முக்கிய எதிர்க்கட்சி. ஆனால் அண்ணா திமுக இன்று பாஜகின் அடிமை கட்சி.”

“தமிழகத்தில் இருந்து எழும் திராவிட சூடு இன்று நாடு முழுவதையும், டெல்லியையும் ஆடவைக்கிறது. அதனால்தான் திமுகவை ஒழிக்க பாஜக பல திட்டங்களை தீட்டுகிறது.”

“எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பாஜகவின் அரசியல் சூழ்ச்சி… சிறுபான்மை, பெண்கள், ஒதுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்க முயற்சி.”2026 தேர்தல் குறித்து உதயநிதி கூறினார்:

“ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் வரலாறு உள்ளது. திமுக 2026-ல் மீண்டும் வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும்.”

“எம்.கே. ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமருவார்… தமிழ்நாடு மக்கள் அவரை மீண்டும் தேர்வு செய்வார்கள்.”

அவர் இறுதியாக, வரும் நான்கு மாதங்களில் திமுகவினர் அதிக கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்றும், SIR நடவடிக்கைக்கு எதிராக வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dravidian fervor is making Delhi dance BJP is planning to eliminate DMK at any cost Udhayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->