சுட்டிக்குழந்தையின் கொரோனா விழிப்புணர்வு.. கியூட் ரியாசன் வைரல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்தனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது. 

இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 11 இலட்சத்தை நெருங்கியுள்ளது. நாளொன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்க தொடங்கியுள்ளனர். மேலும், பலி எண்ணிக்கையும் 15 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு வாயசைத்து பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பழைய பாடலுக்கு ஏற்றார் போல் சிறுமி தனது செய்கைகளை வெளிப்படுத்திய அழகான கொரோனா விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Gudiyatham Child Corona Awareness video Trending on Social Media


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal