#BigBreaking: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 5 நோயாளிகள் அடுத்தது பலி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் தேவையான வசதிகளை தமிழக அரசு மற்றும் தமிழக சுகாதாரத்துறை செய்து வருகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மருத்துவனையில் 50 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மாலை 3.15 மணியளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் 5 பேர் உயிரிழந்த நிலையில், பிற நோயாளிகள் பயம் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vellore Adukkamparai Govt Hospital Oxygen Problem 5 Corona Patients Died 19 April 2021


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->