மாமியார் வீட்டில் மண்டையை உடைத்த மச்சான்.! மனைவியுடன் வாழ நினைத்த கணவனுக்கு நேர்ந்த துயரம்.! - Seithipunal
Seithipunal


கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை, மீண்டும் அழைக்க சென்ற கணவனின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலம்பாளையம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 39). இவரும் காங்கயம் சத்யா நகரை சேர்ந்த ரேணுகாவும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் தற்போது வரை குழந்தை இல்லாத நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாமுவேலை  பிரிந்து ரேணுகா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும், விவாகரத்து கேட்டு காங்கேயம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், ரேணுகாவை சமாதனம் செய்து மீண்டும் திருமண பந்தத்தில் இணைவதற்காக மாமியார் வீட்டுக்கு சாமுவேல் சென்றுள்ளார். அப்போது மாமியார் தேவியிடம், 'தனது மனைவியை குடும்பம் நடத்த தன்னுடன் அனுப்பி வையுங்கள்' என்று சாமுவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்நேரம் ரேணுகாவின் தம்பி லோகநாதன் சாமுவேலை ஆபாச வார்த்தைகளால் திட்டி அருகிலிருந்த உருட்டுக்கட்டையால் சாமுவேலின் தலையில் அடித்துள்ளார். இதனால் சாமுவேலின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.

ரத்தம் வழிந்து ஓடிய சாமுவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது சம்பவம் குறித்து அவர் காவல்துறையினரிடம் சாமுவேல் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், லோகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellakovil samuvel head broken


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal