கொடிக்கம்பம் நட முயன்ற 2 விசிக தொண்டர்கள் மின்சாரம் தாக்கி பலி.! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பிக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதியான இன்று பிறந்தநாள் ஆகும். இன்றைய நாளில் அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், " திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி காவல் நிலையம் எதிர்புறம், விசிக தொண்டர்கள் கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின் போது விசிக தொண்டர்களாக குழந்தை மற்றும் பிரபு ஆகியோர் மின்சார கம்பிகள் பக்கம் கொடிக்கம்பத்தை கொண்டு சென்றதாக தெரியவருகிறது. 

இதனால் மின்சாரம் கொடிக்கம்பத்தில் பாய்ந்து, குழந்தை மற்றும் பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை மீட்ட சக நிர்வாகிகள் சிகிச்சைக்காக விரைந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பலியாகினர். 

மேலும், ஆறுமுகம் என்ற மற்றொரு நிரிவாகியும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சிவகங்கை விசிக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Thirumavalavan MP Birthday Celebration Sivaganga 2 VCK Supporters Died Attack by Electricity


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->